/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, June 25, 2009

எழுத்தாளர் திலகவதி

இலக்கியப் படைப்பாளியின் மனம் மென்மையான உணர்வுகளால் ஆனது. காவல் துறையினரின் மனம் ஒருவித இறுக்கமான உணர்வுடயது. அதிலும் பெண் என்றால் தாய்மை குணம் கொண்டதாக இருக்கும். இங்கு ஒரு பெண் படைப்பாளியாகவும், காவல் துறையில் உயர் பதவியிலும் இருப்பவர் திலகவதி ஐ.பி.எஸ்.

காடந்த ௨0 வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி. உதவி என்று வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறலாம்.கலை மற்றும் இலக்கியம் சம்பந்தமாக அமெரிக்கா,லண்டன்,மலேசியா, சிங்கப்பூர்,சீனா மற்றும் இந்தியாவின் பல மானிலங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் செய்திருக்கிறார்.சாகித்திய அகாடமி பொதுக்குழு உறுப்பினராகவும்,மானில மகளிர் அணையக்க்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து இயங்கிவருகிறார். நல்ல மேடைப்பேச்சாளர்.இதுவரை அருபதுக்கும் மெற்பட்ட புதினங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள்,கவிதகள்,கட்டுரைகள்,மொழிப்பெயர்ப்பு புத்தக வடிவமாக வெளிவந்துள்ளன். இவருடைய பத்தினிப் பெண் புதினம் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இந்தப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடத்துள்ளது. முப்பது கோடி முகங்கள், வார்த்தை தவறிவிட்டாய்,இனிமேல் விடியும் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் வெளிவந்துள்ளன.

இவருடைய புதினம் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து பட்டங்கள் பெற்றிருக்கின்றனர்.

தமிழக அரசின் 1988, 1989 ஆகிய ஆண்டுக்கான சிறந்த கதாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச்சிந்தனைப் பரிசு, புதுவை மானில இலக்கிய விருது,கலைமகள் நாராயணசுவாமி குறு நாவல் பரிசு, அமுதசுரபி மற்றும் சிராம் நிருவனங்களி இணைந்து வழங்கிய போட்டியில் சிறந்த புதிந்த்திர்க்கான முதல் பரிசு, வி. ஜி.பி.சந்தனம்மாள் ஆறக்கட்டளை பரிசு, தாய் பத்திரிக்கையின் சிறந்த சிறுகதைக்கான விருது j.c.s(junior chamber) சங்கத்தின் 1990 ம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த புதின ஆசிரியருக்கான் விருது, சிறந்த சிறுகதையாசிரியைக்கான் ஜொதிவினாயகம் பரிசு, சினிமா கலைமன்ற விருது, இலக்கிய சக்தி 2005 படைப்புக்கான விருது என்று பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான சாகித்திய அகாடமி விருதை இவரது கல்மரம் என்ற புதினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

0 comments: