/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, January 28, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (28-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும்(cill-ldcil) இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் பல்தொழில்நுட்ப துறைப்பேராசிரியர் முனைவர் க. இராஜன் அவர்கள் பொறிமொழிக் கற்றல்(machine leraring) என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



முனைவர் க. இராஜன்

இயந்திரங்களுக்கு அறிவை எவ்வாறு கொடுக்கமுடியும் என்ற நோக்கில் உரை அமைந்திருந்தது. ஒரு சொல்லை உள்ளீடு செய்யும் முன் எழுத்துக்களை பிரிக்க வேண்டும் பிறகு 2,3,4,5, எழுத்துக்கொண்ட வார்த்தைகளைப் பிரித்து பொருள் இலக்கணமும் அதுதொடர்பான தமிழ்ச் செய்யுள் பாடல்களை இடும் நோக்கில் கணினிக்கு அறிவைக் கொடுக்கவேண்டும்.

அடுத்த அமர்வில் பேரா.ந.தெயவசுந்தரம் அவர்கள் சொற்செயலாக்கம்(WORD PROCESSING) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனித மூளைக்கு கற்றுக்கொடுப்பதுபோல கணினிக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறினார்.

1. விதியின் அடிப்படையில்
2. புள்ளியியல் அடிப்படையில்
3. அணுத்திறன் அடிப்படையில்

பேரா. ந. தெய்வசுந்தரம்


மேலும் குழந்தை அறிவை கணினிக்கு எப்படி கொடுப்பது என்றும் விவரித்தார்.

கணினிக்கு மொழி சார்ந்த, அகராதித் தொகுப்பு, சொல் பகுப்பு, எழுத்து உச்சரிப்பு, ஒலி அமைப்பு, தொடரியல், பொருளடைவு, இலக்கணக்கூறுகள் என தனித்தனியே பிரித்து எடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்த கூறுகளினால் கணினியின் மூலம் நாம் இலக்கணத்திருத்தி, சொற்பிழைத்திருத்தி, சந்திப்பிழைத்திருத்தி, இயந்திரமொழிபெயர்ப்பு, பேச்சை எழுதும், எழுதுவதை பேச்சாக மாற்றும் முறையையும் நாம் உருவாக்கலாம் என்று கூறினார்.


மதிய அமர்வில் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தில் ஆய்வுப்பணி செய்துவரும் ஆர்.பிரேம்குமார், திரு. வடிவேல் இருவரும் ஒலியன் வாசிப்புக்கருவி பற்றி விளக்கினர்.

திரு. வடிவேல், திரு. பிரேம்குமார்.


பயிற்ச்சியில் கலந்துகொண்ட cill-ldcil- ஆய்வாளர்கள்



அடுத்த அமர்வில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ்க் கல்வித்துறையின் பேரா. ஆ.முத்தமிழ்ச்செலவன் பேச்சொலி ஆய்வுக் கருவிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொலைபேசியி ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து கேரளவில் இருக்கும் தமிழ்மொழி தெரியாதவருக்குத் தொலைபேசியில் பேசினால் அது அவரது தாய்மொழியான மலையாளந்திறகு மாற்றம் செய்துகொடுக்கும் முறையில் இருக்க வேண்டும் என்றார். அதுபோல உலகமொழிகள் அனைத்திற்கும் தமிழ் மொழியில் கேட்கவேண்டும். அதுபோல உலகமொழிகளிலிருந்து நம் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பேச்சொலி கிடைக்கவேண்டும் என்றார்.
பேராசிரியர் ஆ.முத்தமொழ்ச்செல்வன்


மன்னார்குடி அரசு கலைக்கல்லூரிப் பேராசிரியர் த.கார்த்திகேயன்.

பயிலரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்களில் ஒருவர் வினா எழுப்புகிறார்.




1 comments: