/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 27, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (27-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று எட்டாம் நாளில் காலை அமர்வில் அண்ணாப் பல்கலைக்கழகக் கணிப்பொறியியல் துறைப்பேராசிரியை முனைவர் தெ. வி. கீதா அவர்கள் தமிழ்க் கணினியியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.


பேராசிரியை தெ. வி. கீதா அவர்கள்

தமிழுக்குக் கணினி என்ன செய்தது என்பதைவிட கணினிக்குத் தமிழ் என்ன செயதது என்ற தெளிவான வினாவுடன் உரைத்தொடங்கினார். தமிழ்ச்சொற்களைக்கொண்டு எவ்வாறு அகராதி தயாரிக்கமுடியும், பிறகு இதற்குUNL நிரலாக்கத்தில் 46 வகையான பிரிவுகளில் நம்மால் நிரலாக்கம் செய்து தமிழை உள்ளிடமுடியும் என்றார். முதலில் சொற்களைப் பிரித்து RULS முறையில் உருவாக்க வெண்டும் என்றார்.
வினா விடை முறையில் நாம் சொற்களை அமைக்க முடியும் என்றார்.



அதற்கு ஆதாரமாக அகராதி(http://www.agaraadhi.com/dict/home.jsp) என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் எந்தச் சொல்லை உள்ளீடூ செய்தாலும் பொருள் விளக்கம், சொற்களின் விளக்கம், சொல்லின் அடிபடையில் இருக்கும் திருக்குறளும் இடம்பெற்றுள்ளன. இத்தளம் இவர்களின் ஆராய்ச்சிக்குக் கிடைத்த பரிசாகவும் தமிழ்மொழிக்குக் கிடைத்த அரிய பொக்கிசமாகவும் நாங்கள் கருதினோம். பார்வையாளர்கள் வினாக்களைக்கேட்டனர். அனைத்து வினாக்களுக்கும் தெளிவான பதில்கள் கொடுத்தார்கள். பேராசிரியருடன் அவரது மாணவரும் வந்திருந்தார். அவர் அகராதி இணையப்பக்கத்தில் அண்ணாப்பல்கலைக்கழகம் என்னமாதிரியான ஆராய்ச்சிப்பணி தமிழுக்குச் செய்துள்ளது என்றும் காட்சிப்படமூலம் விளக்கினார்.



பேராசிரியையுடன் முனைவர் துரை மணிகண்டன்

மதிய அமர்வில் அமிர்தா பல்கலைக்கழகக் கணினிப்பொறியியல் துறைப் பேராசிரியர் ச.இராசேந்திரன் அவர்கள் WORDNET(சொல்வலை) என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


பேராசிரியர் ச.இராசேந்திரன்

உருபமைப்பு முறையின் முக்கியத்துவத்தையும் சொல்லுருப்புகளீன் வகைகளையும் கணினிக்குப் பிரித்து கொடுத்தால் அது விரைவாக செயல்படும் என்று கூறினார். மேலும் படிநிலை அமைப்புமுறையின் விளக்கம், பல்பொருள் ஓரொலிச் சொற்கள் பற்றியும் அதனால் கணிப்பொறி மிக வேகமாக தமிழில் உள்ளீடு செய்தால் விரைவாக நாம் தேடிய தமிழ்ச்சொற்கள் கிடைக்கும் என்றார். இப்பணியை நான் ஒருவனால் செய்ய இயலாது அனைவரும் ஒன்றுகூடி செயல்படவேண்டும் என்றார்.



பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்



1 comments:

  • செல்வா says:
    January 29, 2012 at 4:34 PM

    அருமையான பதிவு! தமிழ்க் கணினிமொழியியல்
    துறை வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! மிகச் சிறப்பாக
    நடத்தித்தந்திருக்கும் எசு.ஆர்.எம்
    பல்கலைக்கழகத்துக்கும், அதில் உழைத்து வ்எற்றி நாட்டிய அனைவருக்கும் வாழ்த்துகள்!