/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, June 8, 2012

ஃபேஸ்புக்- முகநூல்- Facebook


ஃபேஸ்புக்- முகநூல்- Facebook

உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று உலகம் விரிந்து, பரந்து வளர்ந்துள்ளது. இன்றைய அறிவியல் புரட்சி இதனைப் புரட்டிப்போட்டுள்ளது. செயற்கைகோள், இணையம் இவைகளின் புதிய வரவுகளால் மனிதர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கொள்ளும் வசதிகளை இது குறைத்துள்ளது. அனால் ஒரு பக்கம் இப்படியென்றால், மறுபக்கம் மனிதர்கள் இன்று செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதிகள் இதனால் கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று இணையத்தில் ஃபேஸ்புக் என்ற முகநூல் அறிமுகமாகியுள்ளது. இதில் நாம் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொண்டால் நமது கருத்துக்களை இலவசமாக வெளியிடலாம். கல்லூரி, விவசாயம், தொழில், அறிவியல், கணிப்பொறிச்சார்ந்த செய்திகள், பாலியல் சார்ந்த கருத்துக்கள் என இதுபோன்ற இன்னும் பல வசதிகளை நாம் அனுப்பிக்கொள்ளலாம் மற்றும் பெற்றும்கொள்ளலாம்.
அமெரிக்காவைச் சார்ந்த மர்க் எலியட் ஜீக்கர் பெர்க் என்பவரால் (Mark Elliot zuckerberg) ஃபேஸ்புக் முதலில் தொடங்கப்பட்டது. இவர் ஒரு தொழில் முனைவராவர். இவர்தான் இதன் நிறுவனரும் ஆவார். மார்க் ஹார்வேர்டில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அவருடைய வகுப்புத் தோழர்களான டஸ்டின்மோஸ்கொவிட்ச், எடர்டோசவெரி மற்றும் கிரிஸ்ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார்கள்.




வாழ்க்கை வரலாறு

நியூயார்க் நகரிலுள்ள ஒயிட் பிளைன்சினில்தான் மார்க் பிறந்தார். நியூயார்கில் உள்ள டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்தவர். நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போதே நிரலாக்கம் செய்யத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் மார்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்டி வெற்றியும் பெற்றுள்ளார். இது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
குறிப்பாக தகவல் தொடர்பு கருவிகள் மற்றூம் விளையாடுத்தொடர்பான நிராலாக்கம் செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். பிலிபிஸ் எக்செட்டர் அகாடெமியில் சேர்வதற்கு முன்பு அர்டெஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்றுகொண்டிருந்தார். உயர்நிலைப்பள்ளியில் மார்க் படிக்கின்றபோது இலக்கியங்களின் ஆர்வமாகப் படித்துள்ளார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார். பின்பு அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார். அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார்.

மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயணர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கும் செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது. மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஏஓஎல் ஆகிய நிறுவனங்கள் சினாப்சிசை வாங்கி ஜீக்கர்பெக்கை பணியமர்த்த முயற்சித்தன. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார்.

ஃபேஸ்புக் தொடக்கம்

பிப்ரவரி 4, 2004 அன்று பெர்க் அவரது ஹார்வேர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பெறும்பாலான கல்லுரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழு, ஒளிப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளீயிடும் நீண்டகால மரபுடைய வழக்கத்தைக் கொண்டிருந்தது. அது ஃபேஸ்புக் என அறியப்பட்டிருந்து.
கல்லூரியில் ஒருமுறை ஜீக்கின்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது ஹார்வேர்டு – நினைவு என்ற பெயரிலேயே தொடங்கியது. பின்னர் பெர்க் தனது ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்குப் பரப்ப முடிவெடுத்துக் கொள்கிறார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்து முடித்தார்.

இடப்பெயர்தல்

தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்சும் மற்றும் வேறுசில நண்பர்களுடனும் பெர்க் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம் பெயர்கிறார், இடம் பெயர்கிறார்.

நியூஸ் பீடு

செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக்கில் நியூஸ் ஃபீடு அறிமுகமாகிறது. நியூஸ் ஃபீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் ஃபீடு தேவையற்றதாகச் சிலர் பார்த்ததற்காகவும், சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் பெர்க் விமர்சிக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் இயங்குதளம்

மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை ஜீக்கர் பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குநர் மத்தியில் நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம். இதன் வளர்ச்சியால் ஒருசில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன.


ஃபேஸ்புக் பீகான்

நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளப்பர அமைப்பை பெர்க் அறிவித்தார். இந்த புதிய நிரலின் ஒரு பகுதி பீக்கான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைதளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்தும், அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்குத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இடமளித்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியல் இட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய முடிந்தது.

இந்த நிரலானது இரண்டு கமுக்க குழுக்கள் மற்றும் தனிப்பட்டப் பயனர்களிடமிருந்து பலமான கமுக்க ஏற்பாடுடகளுடன் வந்தது. பெர்க் இந்த ஃபேஸ்புக் சிக்கலால் விரைவாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் இறுதியாக டிசம்பர் 5, 2007 அன்று ஃபேஸ்புக்கில் ஒரு வலைப்பதிவை பெர்க் எழுதினார். பீக்கானுடன் உள்ள சிக்கல்களுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு பயனர்களுக்கு எளிதான வழியில் பொருத்தமாகவும் உள்ள சேவைகளை வழங்க உள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.

ஃபேஸ்புக்கில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு

அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் 16% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதிபித்தலின் வெளீயீட்டில் ஃபேஸ்புக் , டிவிட்டர் மற்றும் லாஸ்ட் எஃபெம்மின் ஆதரவு இருந்தது என்று பி. எஸ். ஆர் பொறியியல் கல்லூரி எம். பி.ஏ மாணவன் தி. ஆனந்த் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வேடிக்கையாக உருவாக்கப்பட்ட முகநூல் இன்று உலகில் இணையம் பயன்படுத்துபவர்களில் 90% ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர்.

2 comments:

  • Unknown says:
    June 10, 2012 at 1:28 AM

    pathivukku nandri

  • மணிவானதி says:
    June 10, 2012 at 8:02 AM

    அன்பு நண்பர்கள் யாழ் மஞ்சு மற்றும் அரிஃப் அவர்களுக்கு வணக்கம். உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன். நண்பர் அரிஃப் அவர்களுக்கும் எனது நன்றிகள்.