/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, December 13, 2012

கணினியில் தொழில்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும்- தேசியக்கருத்தரங்கம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம்

கணினியில் தொழில்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும்

சங்க இலக்கியம் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வுவாளர்கள், சங்க இலக்கியத்தைப் பன்முக நோக்கிலும், மரபு அடிப்படையிலும், தற்கால கருத்தாக்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் அடிப்படையிலும் கணினியில் தொழில்நுட்பம் கொண்டு திறம்பட ஆய்வு மேற்கொள்வதற்கு உதவும் வகையில் இக்கருத்தங்கம் நடைபெற்வுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிதிநல்கையுடன் 06-02-2013,07-02-2013 மற்றும் 08-02-2013 ஆகிய மூன்று நாட்களில் இக்கருத்தரங்கம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. “கணினியில் தொழிழ்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும்” என்னு மையப் பொருண்மையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில்

1. தொல்காப்பியமும் சங்க இலக்கிய அக மரபும்
2.  தொல்காப்பியமும் சங்க இலக்கிய புற மரபும்
3. கண்னியில் தொழில்நுடபங்களும் சங்க இலக்கியத் தொகுப்பு    முறைமைகளும்
4. கணினியியல் வழி சங்க இலக்கிய அமைப்பு முறையும் அணுகுமுறையும்
5.  கணினியியல் வழி சங்க இலக்கிய  உரையாசிரியர்கள்
6.  கணினியியல் வழி சங்க இலக்கிய  பதிப்புகள்
7. அகராதியில் நோக்கில் சங்க இலக்கிய ஆய்வுகளும் கணினியியல் பயன்பாடும்
8. கணினியியல் அடிப்படையில் சங்க இலக்கிய ஆய்வுகள்
9. சங்க இலக்கியம் பன்முக நோக்கு
10. சங்க இலக்கியம் - செய்யப்படவேண்டிய ஆய்வுகள்.

என்ற தலைப்புகளில் ஆய்வு வல்லுனர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையை வழங்கவுள்ளனர். இக்கருத்தரங்கில் தங்களது நிறுவனத்தில் ஆய்வுமேற்கொள்ளும் ஆய்வு மாண்வர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அவர்களை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.

0 comments: