/// கணினித்தமிழ் பயிலரங்கம் 27-02-2018 வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை; 28-02-2018 அன்று திருச்சிராப்பள்ளி பிஷ்ப்ஷிபர் கல்லூரி; மார்ச் 6,2018 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் சிறப்புரை/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Latest Post

Tuesday, February 13, 2018

கணினித் தமிழ் பயன்பாடுகள் - பயிலரங்கம்-சென்னை

|0 comments



வணக்கம்.
சென்னை, மேடவாக்கத்தில் செயல்படும் எங்கள் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரி கணித்தமிழ்ப் பேரவையின் சார்பில் 19-2-2018, திங்கள் கிழமை அன்று கணினித் தமிழ்ப் பயன்பாடுகள் - பயிலரங்கு (Workshop on Applications in Tamil Computing) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கணிப்பொறித் துறை மாணவர்களுக்கும், தமிழ் மொழித் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பிற துறை மாணவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கத்தக்க வகையில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிலரங்குக் கட்டணம் மற்றும் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு மடல் - அழைப்புமடல் மற்றும் பதிவுப் படிவம் (Registration Form) இணைக்கப்பட்டுள்ளது. பதிவுப் படிவத்தை நகல் எடுத்தோ அல்லது தங்கள் கல்லூரியின் மடல் தாளில் (Letter Head) பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோ அனுப்பி வைக்கலாம்.
முதலில் பதிவு செய்பவருக்கே வாய்ப்பு (Fisrt Come First Serve) என்கிற அடிப்படையில் மாணவர்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் பதிவு ஏற்றுக்கொள்ளப் படுவதில் நிருவாகத்தின் முடிவே இறுதியானது.
தங்கள் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயனடைந்திட அனுப்பிவைத்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பங்கேற்பாளர் அனைவருக்கும் WorkShop Kit, தேநீர், பகல் உணவு, மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|2 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.


இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம் தாழ்த்தியதால், அங்கு செல்லவிருந்த தமிழ் அறிஞர்கள் / ஆர்வலர்கள் கனடா செல்ல இயலாமல் போனது. எனவே, அதே நாளில் அதே வேளையில் இந்தியாவிலும் இந்தக் கருத்தரங்கத்தினை நடத்துவது எனத் தீர்மானித்த இம்மாநாட்டுக் குழுவினர், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா - அதிகாலை 4 மணி) இணையவழிக் காணொலிக் காட்சிகள் வழியாக இரண்டு கருத்தரங்கங்களும் இணைக்கப்பட்டு நடத்தப் பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக உத்தமத்தின் துணைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  (Durai.Manikandan) நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

இணையவழிக் கருத்தரங்கில் மாநாட்டுக் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. அதில் பேரா.க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், பேரா.பத்மநாபபிள்ளை, கருத்தரங்க ஆய்வுக்குழுத் தலைவர் பேரா.க.காமாட்சி, பேராசிரியர் விஜயராணி, பேரா.சி.சிதம்பரம், பேரா.பிரகதி.
வாழ்த்துரை வழங்கிய பேரா.விஜயராணி
நன்றியுரை வழங்கிய பேரா.சிதம்பரம்.
இணையவழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன் எழுதிய ஊடகங்களில் தமிழ் என்ற நூலை முத்துக்கமலம் இணைய இதழ ஆசிரியர் தேனி சுப்பிரமணி பெற்றுக்கொண்டபோது...
மாநாட்டில் வழங்கப்பட்ட பேக் மற்றும் நினைவுப்பரிசு.(முனைவர் துரை.மணிகண்டன், பேரா.காமாட்சி, தகவல் தொடர்பு வினோத்,)
மாநாட்டில் இணையத்தோழி மின்னிதழின் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தேனி சுப்பிரமணி.

Friday, September 29, 2017

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்- Tamil Usages In Internet

|0 comments
சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.
அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து விரிவாக விளக்கினேன். ( இணையம் அறிமுகம், இணையமாநாடுகளின் பங்களிப்பு, எழுத்துரு தோற்றம் இன்றைய நிலை, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம் வளர்ச்சி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் மென்பொருள்கள், அதிலும் குறிப்பாக எழுத்துப்பிழைத் திருத்திகள், முகநூலின் பயன்பாடுகள் அதனை எவ்வாறு எவற்றைப் பயன்படுத்த வேண்டும், போன்ற ....)


(பேராசிரியர் பத்மபிரியா, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.பொன்னி இடையில் Dr.durai.manikandan பேராசிரியர் ச.தனலெட்சுமி மற்றும் வளர்மதி)

மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

                                           (ஆய்வகக் கூடத்தில் பயிற்சியில்)
இறுதியாக செல்வி ச.பாலமுருகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
குறிப்பு:
1. நான் இதுவரை 70 மேற்பட்ட கல்லூரிகளுக்குப் பயிற்சி வழங்க சென்றுள்ளேன். ஆனால் இக்கல்லூரியில்தான் 60 % மாணவிகளுக்குத் தட்டச்சு தெரிந்து இருந்தது. இதற்குக் காரணம் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் ஊக்கம்.
2. அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணினியை இயக்கி தட்டச்சை மிக இலகுவாக பாவித்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எனக்கு வியப்பாகவும் இருந்தது.
3.இதற்கெல்லாம் காரணம் துறைத் தலைவர் முனைவர் பா. பொன்னி அவர்கள்தான்.
வாழ்க வளமுடன்.....
பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற கல்லூரி மாணவிகள்.

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் இணையத்தமிழ்

|0 comments
கும்பகோனம் அரசினர் மகளிர் கல்லூரியில் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பயிற்றுனராக நான் கலந்துகொண்டு விளக்கம் அளித்தேன். 






கல்லூரி முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்- பேராசிரியர்கள் உடன்




பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஒரு பகுதியினர்.

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments


29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.



29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில் சிறபாகத் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப.செந்தில்குமாரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்தியா அவர்களும் இணைந்து செயல் பட்டனர்.
நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த செய்திகளை விரிவாக எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ்த்தட்டச்சு பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், செயற்கை அறிவின் இன்றைய நிலை, காணொளி காட்சியைப் பயன்படுத்தும் திறன், முகநூலின் நன்மைகள், பல்வேறு இலக்கியப் பதிவுகள் போன்றவற்றையும் விளக்கினேன்.
தமிழின் பயன்பாட்டு மென்பொருள்களாக பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மெந்தமிழ் சொல்லாளர், பேரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மென்பொருள்களும் பயன்படுத்திக் காட்டினேன்.
இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.அகிலா நன்றியுரை வழங்கினார்..